Paristamil Navigation Paristamil advert login

இனி 6 மணி நேரத்திற்கும் ஒருமுறை லாக்அவுட் ஆகும் வாட்சப் - அரசின் புதிய கட்டுப்பாடு

இனி 6 மணி நேரத்திற்கும் ஒருமுறை லாக்அவுட் ஆகும் வாட்சப் - அரசின் புதிய கட்டுப்பாடு

1 மார்கழி 2025 திங்கள் 12:28 | பார்வைகள் : 113


வாட்சப், டெலிகிராம் போன்ற செயலிகள் இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

சிம் கார்டு இல்லாமல், இந்த செயலிகளை பயன்படுத்தி மோசடி கும்பல்கள் மக்களை ஏமாற்றி வருவது அதிகரித்தது. சிம் கார்ட் இல்லாததால் அவர்களை கண்டறிவது காவல்துறைக்கு சிரமமாக இருந்தது.

 

இந்நிலையில், இந்த மோசடிகளை தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை இந்திய அரசு அறிவித்துள்ளது.

 

தற்போது வாட்ஸ்அப்பை மொபைலில் இன்ஸ்டால் செய்யும் போது மட்டும் ஓடிபி (OTP) கொடுத்துவிட்டால் போதும். அதன்பிறகு அந்தச் சிம் தேவை இல்லை. wifi அல்லது வேறு சிம் மூலம் கிடைக்கும் இணைய இணைப்பை வைத்து வாட்சப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடிந்தது.

 

இனி வாட்சப், டெலிகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்த செயலில் உள்ள சிம் உங்கள் மொபைல் போனில் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை அரசு அமுல்படுத்தியுள்ளது.

 

அதேபோல், கணினி மூலம் வாட்சப் வெப் பயன்படுத்துபவர்களுக்கு 6 மணி நேரத்திற்கு ஒருமுறை லாக் அவுட் ஆகிவிடும். மீண்டும் QR ஸ்கேன் செய்து உள் நுழைய வேண்டும்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்