இலங்கையில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர்: ஐவர் வைத்தியசாலையில்
30 கார்த்திகை 2025 ஞாயிறு 17:20 | பார்வைகள் : 1005
சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
வென்னப்புவ மற்றும் லுணுவில அண்மித்த பிரதேசத்தில் பெல் 212 ரக ஹெலிகொப்டர் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்குவதற்கு விமானப்படை இன்று (30) முற்பகல் முதல் பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது. அச்சமயத்திலேயே லுணுவில, கிங் ஆற்றில் பெல் 212 ரக ஹெலிகொப்டர் வீழ்ந்து நொறுங்கியது.
விபத்துக்குள்ளான வேளையில், லுணுவில பாலத்திற்கு அருகில் இருந்தவர்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்குவதற்கு விமானப்படை அதிகாரிகள் பாதுகாப்பாக தரையிறங்க முயற்சித்த வேளையில், பாலத்தில் மக்கள் தங்கியிருந்தமையால் அந்த முயற்சி தடைப்பட்டது.
இதன்போதே இந்த விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ஹெலிகொப்டரில் பயணித்த விமானிகள் உட்பட 5 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan