EuroMillions: 178 மில்லியன் யூரோக்களை வென்ற பிரெஞ்சுக்காரர்!!
29 கார்த்திகை 2025 சனி 20:00 | பார்வைகள் : 4004
EuroMillions இல் 178 மில்லியன் யூரோக்களுக்கான ஜாக்பாட் விழுந்துள்ளது, மேலும் அதனை வென்றது ஒரு பிரெஞ்சுக்காரர் என்று FDJ United அறிவித்துள்ளது.
இந்த பரிசை பெற 5-29-33-39-42 என்ற எண்களையும், நட்சத்திர எண்களாக 3 மற்றும் 9 தேர்வு செய்யப்பட்டுள்ளது. நேற்று நீங்கள் EuroMillions விளையாட்டில் பங்கேற்றிருந்தால், உங்கள் டிக்கெட்டை ஒரு முறை சரிபார்த்துக்கொழள்ளுங்கள்.
தொடர்ந்து 13 முறைகளாக யாரும் வெல்லாததால் இந்த மிகப்பெரிய தொகை உருவாகியுள்ளது. இது பிரான்சில் வெல்லப்பட்ட நான்காவது மிகப்பெரிய பரிசுத்தொகையாகும்.
இந்த ஆண்டு ஆகஸ்டில், Île-de-France பிராந்தியத்தைச் சேர்ந்த ஐந்து நண்பர்கள் 250 மில்லியன் யூரோக்களை வென்று இதுவரை பிரான்சில் கிடைத்த மிகப்பெரிய Euromillions பரிசை பெற்றுள்ளனர்.
இதற்கு முன் 220 மில்லியன் யூரோக்கள் பரிசை 2021-ல் தஹீட்டியில் (Tahiti)வெல்லப்பட்டது. EuroMillions பரிசின் வரம்பான 250 மில்லியன் யூரோக்கள் இதற்கு முன் ஆஸ்திரியா மற்றும் அயர்லாந்திலும் வெல்லப்பட்டுள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan