மூட்டைப்பூச்சிகள் காரணமாக பிரஞ்சு திரையரங்குகள் தற்காலிக மூடல்!!
28 கார்த்திகை 2025 வெள்ளி 21:14 | பார்வைகள் : 5253
பரிஸ் நகரில் உள்ள பிரன்சு திரையரங்கில், புதிய மூட்டைப்பூச்சிகள் (punaises de lit) கடிப்பதாக வந்த புகார்களின் காரணமாக, தனது திரையரங்குகளை நவம்பர் 28 முதல் ஒரு மாதத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளது.
இதற்கு முன்பும் சில பார்வையாளர்கள் பூச்சிகளால் கடிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்கள், இதையடுத்து நிறுவனம் சுகாதார நடைமுறைகளை வலுப்படுத்தியிருந்தது. புதிய புகார்களின் பின்னர், அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்காக இந்த தற்காலிக மூடல் அவசியமாகியுள்ளது.
இந்த காலத்தில், அனைத்து இருக்கைகளும் அகற்றப்பட்டு, 180°C உலர் நீராவி மூலம் பல முறை தனித்தனியாக துப்பரவு செய்யப்படும்; ஒவ்வொரு கட்டமும் நாய்கள் வழிச் சோதனையால் சரிபார்க்கப்படும். தரைவிரிப்புகளும் இதே முறையில் சுத்தம் செய்யப்படும்.
திரையரங்குகளைத் தவிர்த்து, சினிமத்தேக்கின் (La Cinémathèque) பிற பகுதிகள் அனைத்தும் திறந்திருக்கும் மற்றும் ஏனைய பகுதிகள் இந்த பிரச்சினையால் பாதிக்கப்படவில்லை.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan