Paristamil Navigation Paristamil advert login

பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வர வேண்டாம்; முதல்வர் ஸ்டாலின்

பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வர வேண்டாம்; முதல்வர் ஸ்டாலின்

29 கார்த்திகை 2025 சனி 08:14 | பார்வைகள் : 100


வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையினைப் பின்பற்றி, பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வரவேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;

தித்வா புயல் பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.

16 மாநில பேரிடர் மீட்பு படைகளும் 12 தேசிய பேரிடர் மீட்பு படைகளும் கடுமையான மழைப்பொழிவு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

அனைத்துத் துறைகளும் முறையான திட்டமிடுதலோடு ஒருங்கிணைந்து செயல்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்திட வேண்டும்.

பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையினைப் பின்பற்றி, அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தமது பதிவில் கூறி உள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்