உயர்தரப் பாடசாலைகளில் கைபேசிக்கு தடை : மக்ரோன் புதிய அறிவிப்பு!!
28 கார்த்திகை 2025 வெள்ளி 16:17 | பார்வைகள் : 371
இம்மானுவேல் மக்ரோன் அடுத்த கல்வியாண்டு தொடக்கம் முதல் உயர்தரப் பாடசாலைகளில் கைபேசிகளைத் தடை செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
திரை (écran) அடிமைத்தனத்தால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். கடந்த இலையுதிர்காலத்தில் நடுநிலைப் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட "மொபைல் போன் இடைநிறுத்தம்" முறை, அனைத்துப் பள்ளிகளிலும் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் , நடுநிலைப் பாடசாலை மாணவர்களுக்கான இந்தத் தடை "நன்றாகச் செயல்படுகிறது, ஏனெனில் இது ஒரு தேசிய தடையாக செயல்படுத்தப்படுகிறது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் லோர் மில்லர் (Laure Miller ) இதே தடை சட்டத்தை ஏற்கனவே உயர்நிலைப் பாடசாலைகளுக்கும் விரிவுபடுத்த ஒரு முன்மொழிவையும் சமர்ப்பித்துள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் அல்லது ஒருவரின் கண்ணியத்தை கெடுக்கும் தகவல்கள் பரவும் போது அவற்றை அவசரமாகத் தடுக்க “référé” எனப்படும் விரைவான நீதிமன்ற நடைமுறையை உருவாக்க விரும்புவதாக மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய சட்ட வடிவத்தை மிக விரைவாக பிரான்சின் நீதிமுறை அமைப்பில் சேர்க்க அரசாங்கத்திடம் அவர் பணித்துள்ளார், மேலும் ஆண்டின் இறுதிக்குள் இதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan