Paristamil Navigation Paristamil advert login

வெளிநாட்டு சொத்துக்களை மறைத்த 25,000 பேருக்கு வரித்துறை நோட்டீஸ்

வெளிநாட்டு சொத்துக்களை மறைத்த 25,000 பேருக்கு வரித்துறை நோட்டீஸ்

28 கார்த்திகை 2025 வெள்ளி 10:21 | பார்வைகள் : 100


வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பான விபரங்களை தங்களது வருமான வரி தாக்கலில் தெரிவிக்காத 25,000 பேருக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்ப உள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் தொடர்பாக இவை அனுப்பப்பட உள்ளன.மேலும் தெரிவித்ததாவது:இவர்கள் அனைவரும் அதிக ரிஸ்க் உடையவர்கள் என வகைபடுத்தப்பட்டுள்ளனர். இந்த அதிக ரிஸ்க் உடைய நபர்கள், தகவல்களை தானாகப் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தின் கீழ், வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்

அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முதற்கட்டமாக கிட்டத்தட்ட 25,000 பேருக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்பி, வரும் டிசம்பர் 31க்குள் திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல் செய்யும்படிஅறிவுறுத்தப்படும். தவறும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் நடுப்பகுதியில் இருந்து, மற்றவர்களுக்கும் இந்த நடவடிக்கை விரிவுபடுத்தப்படும்.இவ்வாறு தெரிவித்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்