ரஷ்யாவை சுற்றி வளைத்த 118 ஆளில்லா விமானங்கள் -முறியடிக்கப்பட்ட ட்ரோன் தாக்குதல்
27 கார்த்திகை 2025 வியாழன் 11:30 | பார்வைகள் : 229
ரஷ்யாவை நோக்கி ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான உக்ரைனிய ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக ரஷ்யா அறிக்கை வெளியிட்டுள்ளது.
இரவோடு இரவாக ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய கொடூரமான ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக இடைமறித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், உக்ரைனால் ஏவப்பட்ட 118 ஆளில்லா ட்ரோன்களை ரஷ்ய வான் பாதுகாப்பு படைகள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியதாக தெரிவித்துள்ளது.
மாஸ்கோ நேரப்படி நவம்பர் 26ம் திகதி இரவு 11 மணியளவில் தொடங்கி அடுத்த நாள் காலை 8.30 மணி வரை தாக்குதல் நடந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் விவரித்துள்ளது.
உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் குறிப்பிட்ட ரஷ்ய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளது.
அதன்படி, பெல்கோரோட் பகுதியில் 52 ட்ரோன்களும், குர்ஸ்க் பகுதியில் 26 ட்ரோன்களும், சமாரா பகுதியில் 18 ட்ரோன்களும் இப்பகுதிகளில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
அதைப்போல, கிராஸ்னோடார் பிரதேசம், ப்ரியன்ஸ்க், வோரோனேஜ், ஆகிய பகுதிகளிலும் உக்ரைனின் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan