இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
27 கார்த்திகை 2025 வியாழன் 11:30 | பார்வைகள் : 171
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா கடற்கரையில் உள்ள ஒரு தீவில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிமியூலு தீவில் உள்ளூர் நேரப்படி காலை 11:56 மணிக்கு 25 கிலோமீற்றர் ஆழத்தில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நிலநடுக்கத்திற்குப் பிறகு, இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையம், நிலநடுக்கத்தால் உருவாகக்கூடிய சுனாமி அச்சுறுத்தலுக்கு வாய்ப்பில்லை என்று கூறியது.
இதனிடையே, இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் முகமை (BMKG) தெரிவிக்கையில், சிமியூலு தீவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்றும்,
இந்த நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவித்துள்லது. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு பரந்த தீவுக்கூட்டமான இந்தோனேசியா, பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால் அடிக்கடி நிலநடுக்கங்களை சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan