Paristamil Navigation Paristamil advert login

சீனாவில் ரயில் மோதி விபத்து - 11 பேர் பலி

சீனாவில் ரயில் மோதி விபத்து - 11 பேர் பலி

27 கார்த்திகை 2025 வியாழன் 11:30 | பார்வைகள் : 160


சீனாவின் தென்மேற்கு நகரமான குன்மிங்கில் (Kunming) 27.11.2025 ரயில்வே தொழிலாளர்கள் குழு மீது ரயில் ஒன்று மோதியதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இது ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலப் பகுதியில் நாட்டில் பதிவான மிக மோசமான ரயில் விபத்தாகும்.

 

நகரின் லுயோயாங் டவுன் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தின் வளைப் பகுதியில் இருந்த தொழிலாளர்கள் மீதே குறித்த ரயில் மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர்கள் ஒரு அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

 

சீனாவின் ரயில் வலையமைப்பு உலகின் மிகப்பெரியது, 160,000 கி.மீ.க்கும் அதிகமான தூரம் நீண்டுள்ளது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கான பயணங்களை முன்னெடுக்கிறது.

 

இந்நிலையில் சீனாவின் ரயில்வே அதன் செயல்திறனுக்காகப் பாராட்டப்பட்டாலும் கடந்த தசாப்தங்களில் சில மோசமான விபத்துக்களை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்