அமெரிக்காவில் எரிமலை வெடிப்பு - 400 அடி உயரத்திற்கு வெளியேறிய நெருப்பு குழம்பு
27 கார்த்திகை 2025 வியாழன் 05:43 | பார்வைகள் : 191
அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள தேசிய பூங்காவில் அமைந்துள்ள கிலாவியா எரிமலை 26.11.2025 மதியம் 2.30 மணியளவில் வெடித்து சிதறியுள்ளது.
எரிமலை வெடிப்பை தொடர்ந்து, எரிமலையிலிருந்து நெருப்பு குழம்பு சுமார் 400 அடி உயரம் வரை மேல்நோக்கி எழுந்தது வெளியேறியுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) எரிமலையின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
கடந்த காலங்களில் கிலாவியா எரிமலையில் வெடித்தபோது நெருப்பு குழம்பு 20,000 அடி உயரம் வரை சென்றதாக தகவல்கள் உள்ளன.
காற்றின் வேகம் காரணமாக தற்போது வெளியேறும் சாம்பல் தென்மேற்கு திசை நோக்கி செல்ல வாய்ப்பு இருப்பதாகவும், ஹவாய் விமான நிலையங்களில் விமான போக்குவரத்துக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan