Paristamil Navigation Paristamil advert login

ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - நால்வர் பலி

 ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - நால்வர் பலி

26 கார்த்திகை 2025 புதன் 17:36 | பார்வைகள் : 117


ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டாயிரம் வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் தீப்பற்றி எரிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ, அருகாமையில் இருந்த குடியிருப்பு கட்டடங்களுக்கும் பரவியது.

தீ விபத்து ஏற்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமானோர் சிக்கியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் தீயணைப்பு படையினரின்  தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் முயற்சியானது தீவிரமடைந்து வருகின்றது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்