Paristamil Navigation Paristamil advert login

இத்தாலியில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை - பெரும் பரபரப்பு

 இத்தாலியில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை - பெரும் பரபரப்பு

26 கார்த்திகை 2025 புதன் 17:36 | பார்வைகள் : 1578


இத்தாலியில் இளம் இத்தாலிய ஜோடி ஒன்று கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளாகிய நிலையில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கார் ஒன்றில் இருந்த 18 வயதான மணப்பெண்ணை, மூன்று நபர்கள் கொண்ட குழு ஒன்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரது காதலனை இந்தச் சம்பவத்தைப் பார்க்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இளம் ஜோடி, தங்கள் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, மூன்று நபர்கள் கொண்ட குழுவால் வழிமறிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் முதலில் இளம் ஜோடி இருந்த காரின் கண்ணாடியை உடைத்து அவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர். பின்னர், 18 வயதான இளம் பெண்ணின் காதலனை வலுக்கட்டாயமாகப் பிடித்து வைத்துக்கொண்டு, அவர் கண்முன்னேயே பெண்ணை அவர்கள் வன்முறையாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்தக் கொடூரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மணப்பெண்ணும், அவரது காதலரும் மிகுந்த அதிர்ச்சியிலும் மன உளைச்சலிலும் உள்ளனர்.

இத்தகைய கொடூரமான செயல் இத்தாலிய சமூகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் உடனடியாக இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

2 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026