மின்சார வாகனங்களுக்கு 5,700 யூரோக்கள் வரை போனஸ் உயர்வு!!
26 கார்த்திகை 2025 புதன் 15:07 | பார்வைகள் : 154
மின்சார வாகனங்களுக்கான போனஸ் 2026 ஆம் ஆண்டில் அதிகரிக்க உள்ளதாக பொருளாதார அமைச்சர் ரோலான்ட் லெஸ்கூர் (Roland Lescure) இன்று அறிவித்துள்ளார்.
பிரான்ஸ் அல்லது ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட மின்சார காரை வாங்கும் பயனாளர்களுக்கு அதிகபட்சம் 5,700 யூரோக்கள் வரை உதவி வழங்கப்படும். இது வருமானத்தைப் பொறுத்து மாறுபடும். அரசு குறைந்த செலவில், கார்பன் இல்லாத மின்சாரத்தில் தொடர்ந்து முதலீடு செய்ய விரும்புகிறது என்றும், பிரான்ஸில் அதிகம் விற்கப்படும் மின்சார வாகனம் வட பிரான்சில் உள்ள டுவாயில் (Douai) தயாரிக்கப்படும் ரெனோ 5 (Renault 5) என்பதில் அவர் பெருமையுடன் கூறியுள்ளார்.
சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட குறைப்புகளுக்குப் பிறகு, பசுமைப் போனஸ் 2024 ஜூலை 1ஆம் தேதி முதல் 200 முதல் 1,200 யூரோக்கள் வரை உயர்த்தப்பட்டது, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சுமார் 4,200 யூரோக்கள் வரை உதவி கிடைத்தது. மேலும், ஐரோப்பிய பேட்டரி கொண்ட மின்சார கார்களை வாங்குவோருக்கு அக்டோபர் 1 முதல் 1,000 யூரோக்கள் மதிப்புள்ள சிறப்பு கூடுதல் போணஸ் அறிவிக்கப்பட்டது. இது மின்சார வாகனங்களின் வாங்கலை ஊக்குவிப்பதற்கும், ஐரோப்பிய ஆட்டோமொபைல் துறையின் மாற்றத்தையும் ஆதரிப்பதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan