இந்தியாவுடன் வலுவான உறவு; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி
26 கார்த்திகை 2025 புதன் 11:19 | பார்வைகள் : 100
இந்தியாவுடனான இஸ்ரேலின் உறவு வலுவானது என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வரத் திட்டமிட்டிருந்தார். ஆனால், டில்லி கார் குண்டுவெடிப்பு காரணமாக பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு இந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நடப்பு 2025ம் ஆண்டில் மட்டும் மூன்றாவது முறையாக இஸ்ரேல் பிரதமரின் இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய பயணத்திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பயணம் ரத்து செய்யப்ப்பட்ட நிலையில், இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவுடனான இஸ்ரேலின் உறவும், பிரதமர் நெதன்யாகுவுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையிலான உறவும் மிகவும் வலுவானது. பிரதமர் மோடியின் கீழ் இந்தியாவின் பாதுகாப்பில் பிரதமருக்கு முழு நம்பிக்கை உள்ளது, புதிய வருகை தேதியை முடிவு செய்வது பற்றி இருநாட்டு அரசு குழுக்களும் ஆராய்ந்து வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan