10 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக வெடித்த எரிமலை
25 கார்த்திகை 2025 செவ்வாய் 11:51 | பார்வைகள் : 165
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு எத்தியோப்பியா இந்நாட்டின் அபார் மாகாணத்தில் ஹேலி குப்பி என்ற எரிமலை உள்ளது.
எரித்திரியா நாட்டின் எல்லை அருகே இந்த எரிமலை அமைந்துள்ளது. இதனிடையே, ஹேலி குப்பி எரிமலை கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளாக எந்தவித வெடிப்பும் இன்றி அமைதியான இருந்து வந்தது.
இந்நிலையில், 10 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக ஹேலி குப்பி எரிமலை இன்று வெடித்து சிதறியது.
எரிமலையில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கரும்புகை வெளியேறி வருகிறது.
எரிமலை வெடிப்பால் லாவா எரிமலை குழம்பும் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan