விளாடிமிர் புட்டின் போர்நிறுத்ததை விரும்பவில்லை! - பொதுமக்களை தொடர்ந்து கொன்று குவிக்கிறார்! - மக்ரோன் சீற்றம்!!
25 கார்த்திகை 2025 செவ்வாய் 09:18 | பார்வைகள் : 366
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் போர் நிறுத்ததை விரும்பவில்லை எனவும், அவர் பொதுமக்களை கொன்று குவிக்கிறார் எனவும் மிகவும் சீற்றத்துடன் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார்.
”அவருக்கு உண்மையில் போர் நிறுத்தம் தேவை என்றால் அதனை உடனடியாகவே அவரால் நிறுத்த முடியும். ஆனால் அவர் பொதுமக்களை கொல்வதை தொடர்கிறார். அவர் எரிசக்தி மற்றும் மின்வழங்கல் உட்கட்டமைப்பை முற்றாக அழித்து மக்களை குளிர் மற்றும் இருளில் ஆழ்த்துகிறார்!” என ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.
“சமாதானம் போர் நிறுத்தத்தில் தான் தொடங்குகிறது!” எனவும் அவர் மிக ஆக்ரோஷமாக தெரிவித்தார்.
அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதிக்கான திட்டம் “ஒரு மிகச்சரியான படி. ஆனால் கீவ் நகரம் சரணடைவது போன்ற ஒரு அமைதியையோ, சமாதானத்தையோ விரும்பவில்லை!” எனவும் மக்ரோன் குறிப்பிட்டார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan