ஆப்கானிஸ்தான் மக்கள் இந்தியாவில் சிகிச்சை பெறலாம்; மீண்டும் தொடங்கும் விசா சேவைகள்
25 கார்த்திகை 2025 செவ்வாய் 11:09 | பார்வைகள் : 1973
ஆப்கானிஸ்தானில் உள்ளவர்கள் இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் விசா சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவதாக ஆப்கன் அமைச்சர் அல்ஹாஜ் நூருதின் அஜிஜி கூறி உள்ளார்.
இந்தியா உடனான வர்த்தகம் மற்றும் முதலீடுக்கான உறவை மேம்படுத்தும் வகையில் ஆப்கானிஸ்தான் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அல்ஹாஜ் நூருதின் அஜிஜி 5 நாள் பயணமாக புது டில்லி வந்தார்.
புதுடில்லியில் அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது;
மருத்துவ சேவைகளுக்காக இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையே விசா சேவைகள் தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. எங்கள் நாட்டில் உள்ள நோயாளிகள் சிகிச்சைக்காக இந்தியா வருவதை உறுதி செய்ய நாங்கள் முயற்சிப்போம். அவர்களுக்கான வசதிகளை அளிப்பதில் தூதரகம் முக்கிய பங்கு வகிக்கும்.
காபூலில் உள்ள இந்திய தூதரகம் அதற்கான திட்டங்களை உருவாக்கும். வங்கித்துறையில் சில சிக்கல்கள் இருக்கின்றன. ஆப்கானிஸ்தானில் உள்ள அரசு வங்கிகள், தனியார் வங்கிகள் இரண்டும் வர்த்தகத்திற்காக சிறப்பான சேவையை அளித்து வருகின்றன. வணிகத்திற்கு தேவையான விஷயங்களில் வெளிப்படையாகவே உள்ளோம்.
வங்கித்துறையில் மத்திய ஆசிய நாடுகள் உடன் நல்ல உறவை கடைபிடித்து வருகிறோம். இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே சின்ன,சின்ன சிக்கல்கள் உள்ளன. அவை தீர்க்கப்படும். வங்கித் துறையில் கூடுதல் வசதிகளை வழங்குவதே எங்கள் கவலையாக இருக்கிறது. அவை வேண்டும் என்று இரு தரப்பிலிருந்தும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் அல்ஹாஜ் நூருதின் அஜிஜி கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan