Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

உணவகத் துறைக்கு நிம்மதி அளிக்கும் அரசு அறிவிப்பு!!

உணவகத் துறைக்கு நிம்மதி அளிக்கும் அரசு அறிவிப்பு!!

30 மார்கழி 2025 செவ்வாய் 07:38 | பார்வைகள் : 2409


2026 ஆம் ஆண்டிலும் டிப்ஸ் (pourboires) மீது வரி விதிக்கப்படாது. 2022 முதல் வழங்கப்பட்டு வரும் டிப்ஸ் மீதான சமூகக் கட்டண விலக்கை தொடர அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக வரும் நாட்களில் அரசிதழில் (Journal officiel) ஒரு அதிகாரப்பூர்வ உரை வெளியிடப்பட உள்ளது. 

அரசின் பட்ஜெட் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், இந்த வரிவிலக்கு 2026 ஜனவரி 1 முதல் முடிவடைய வேண்டியிருந்தது; ஆனால் அது தொடரப்படும் என அரசு உறுதிப்படுத்தியுள்ளது. அக்டோபரில், தேசிய சட்டமன்றம் டிப்ஸ் வரிவிலக்கை 2028 வரை நீட்டிக்க வாக்களித்திருந்தது. 

பணமாகவோ அல்லது கார்டு மூலமாகவோ வழங்கப்படும் டிப்ஸ்களுக்கு வரி விதிக்கும் யோசனை, உணவகங்கள் மற்றும் கஃபே துறையில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. சேவையாளர்கள் மட்டுமின்றி, பணியாளர்களை நியமிப்பதில் சிரமத்தை எதிர்கொள்ளும் இந்தத் துறைக்கு டிப்ஸ் ஒரு ஈர்ப்பு அம்சம் என கருதும் உரிமையாளர்களும் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டிலும், அரசின் பட்ஜெட் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன், டிப்ஸ்களின் சமூகக் கட்டண விலக்கு ஆபத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்