Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

ஜனவரி 1 முதல் சிறப்பு மருத்துவர்களின் கட்டணங்கள் அதிகரிப்பு!!

ஜனவரி 1 முதல் சிறப்பு மருத்துவர்களின் கட்டணங்கள் அதிகரிப்பு!!

29 மார்கழி 2025 திங்கள் 21:51 | பார்வைகள் : 737


ஜனவரி 1 முதல், 2024ஆம் ஆண்டு சுகாதார காப்பீட்டுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சில தனியார் சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனை கட்டணங்கள் உயரவுள்ளன. 

இந்த உயர்வுகள் முதலில் 2025 ஜூலை மாதத்தில் அமலுக்கு வர வேண்டியிருந்தது, ஆனால் சுகாதார காப்பீட்டு நிதி நிலை மோசமடைந்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டன. 

  • குழந்தை மருத்துவர்களுக்கு (les pédiatres) உதாரணமாக, 2 வயது வரை கட்டாய பரிசோதனைகளுக்கு €5 முதல் €50 வரை அதிகரிக்க உள்ளது. 
  • மனநல மருத்துவர்களுக்கான (les psychiatres) கூடுதல் கட்டணம் பெரும்பாலும் குழந்தைகளுக்கு €12 இலிருந்து €18 ஆக அதிகரிக்கவுள்ளது. 
  • நரம்பியல் நிபுணர்களின் (les neurologues) நிலையான ஆலோசனைக்கு €2 அதிகரிப்பு, மொத்த தொகை €52 ஆகக் அதிகரிக்கிறது
  • தோல் மருத்துவர்கள் (les dermatologues) குறிப்பிட்ட ஸ்கிரீனிங் ஆலோசனைகளுக்கு €4 முதல் €60 வரை உயர்வடைகின்றன.

நாளமில்லா சுரப்பியியல் நிபுணர்கள் (les endocrinologues), மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் (gynécologues) மற்றும் உடல் மருத்துவம் (la médecine physique) மற்றும் மறுவாழ்வு நிபுணர்கள் (réadaptation) தொழில்நுட்ப நடைமுறைகள் (Les actes techniques), அத்துடன் அறுவை சிகிச்சை (chirurgie) நடைமுறைகளும் சற்று மறு மதிப்பீடு செய்யப்படுகின்றன.

மேலும், 2026 ஜனவரி 1 முதல் 80 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்காக குடும்ப மருத்துவரின் “நீண்ட ஆலோசனை” (la consultation longue) அமுலுக்கு வருகிறது. இது ஆண்டுக்கு ஒருமுறை 60 யூரோக்கள் வசூலிக்கப்படலாம். மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்ட பின், ஒரே நேரத்தில் பல சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளுக்கு சில மருந்துகளை நிறுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்