ஜனநாயகன் ரீமேக் படமா?
28 மார்கழி 2025 ஞாயிறு 12:19 | பார்வைகள் : 260
ஜனநாயகன் ரீமேக் படமாக இருக்கும் என சினிமா ரசிகர்கள் பலர் யூகித்துள்ள நிலையில் அதற்கான பதிலை இயக்குனர் எச்.வினோத் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார்.நடிகர் விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்நிலையில் ஜனநாயகன் படத்துடைய இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புகழ்பெற்ற நேஷனல் ஸ்டேடியம் புக்கிட் ஜலீலில் நடைபெற்றது.
இதற்கிடையே ஜனநாயகன் திரைப்படம் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் எச். வினோத் கூறியதாவது-
கொஞ்சம் ஜனநாயகன் முன்னாடி பின்னாடி மாதிரி இருக்கே. உள்ள புகுந்து அடிச்சிடலாமா.. அப்படின்னு நெனைக்கிறவங்களுக்கும், நான் சொல்ல விரும்புறது.. ஐயா இது தளபதி படம்.அதனால உங்க மனசுல என்ன இருந்தாலும் அதை அழிச்சிட்டு, 100 பர்சன்ட் Engaging என்டர்டெய்னான படத்தை பார்க்க வாங்க. நீங்க ஆடிப்பாடி கொண்டாடுறதுக்கும், அமைதியா யோசிக்கிறதுக்கு காட்சிகள் இருக்கு.
இந்த படத்துல கடைசி 15 நிமிஷத்துல எமோஷனல் அழுகை காட்சிகள் இருக்கிறதா சொல்றாங்க. அப்படி எதுவும் கிடையாது. படத்தோட முடிவுல நம்பிக்கை தான் இருக்கு. ஏன்னா தளபதிக்கு இது முடிவு கிடையாது. ஆரம்பம். என்று பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan