Shein நிறுவனத்தின் துணி அல்லாத பொருட்களில் 25% விதிமீறல்கள்: சுங்கத் துறை அறிவிப்பு!!
27 மார்கழி 2025 சனி 21:00 | பார்வைகள் : 1191
Roissy-CDG விமான நிலையத்தில் நவம்பர் தொடக்கத்தில் நடைபெற்ற சுங்கத் துறை ஆய்வின்போது, Shein நிறுவனத்தின் 3,20,474 பார்சல்கள் சோதனை செய்யப்பட்டன. இதில் துணி அல்லாத பொருட்களில் 25% விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லாதவை என சுங்கத் துறை இன்று தெரிவித்துள்ளது.
கண்டறியப்பட்ட முறைகேடுகளில் போலிப் பொருட்கள், அழகு சாதனங்கள் மற்றும் மின்சாதனங்களில் தேவையான குறிச்சொற்கள் அல்லது வழிமுறைகள் இல்லாமை, மேலும் சில பொம்மைகளில் பாதுகாப்பு தரநிலைகள் பின்பற்றப்படாதது ஆகியவை அடங்கும். இந்த எண்ணிக்கை, முன்பு அரசு அறிவித்த, ஆய்வு செய்யப்பட்ட 200,000 பொட்டலங்களில் 80% விதிமீறல் என்ற மதிப்பீட்டை விட குறைவாகவே உள்ளது.
Shein நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளான துணி பொருட்களில் விதிமீறல்கள் மிகக் குறைவாகவே காணப்பட்டதாக சுங்கத் துறை தெரிவித்துள்ளது. இதற்குக் காரணமாக, சுங்க ஆய்வுக்கு சில நாட்களுக்கு முன் Shein தனது மார்க்கெட்-ப்ளேஸை தற்காலிகமாக மூடியிருந்ததை குறிப்பிடப்படுகிறது.
இந்த ஆய்வு நவம்பர் 6-ஆம் தேதி நடைபெற்றது; ஆனால் இதன் சட்டப்பூர்வ தொடர்ச்சி மற்றும் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து அதிகாரிகள் இதுவரை எந்த விவரமும் வெளியிடவில்லை.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan