சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ஜனநாயகன் ஆடியோ ரிலீஸ்..
27 மார்கழி 2025 சனி 17:11 | பார்வைகள் : 199
மலேசியாவில் நடைபெற்றுள்ள விஜய்யின் ஜனநாயகன் படத்துடைய ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி அந்நாட்டின் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அதற்கான சான்றிதழ் விஜய்யிடம் மேடையிலேயே அளிக்கப்பட்டதை தொடர்ந்து ரசிகர்கள் பெரும் ஆரவாரத்தை எழுப்பினர்.நடிகர் விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அஜித்தின் 3 படங்களை இயக்கிய எச்.வினோத் ஜனநாயகன் படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திலிருந்து வெளிவந்துள்ள பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.
இந்நிலையில் ஜனநாயகன் படத்துடைய இசை வெளியீட்டு விழா. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புகழ்பெற்ற நேஷனல் ஸ்டேடியம் புக்கிட் ஜலீலில் நடைபெற்றது. 80,000 பேர் அமரக்கூடிய அந்த பிரம்மாண்ட மைதானத்தில், 75,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு வந்து ஒட்டுமொத்த மலேசியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர்.
ஒரு தமிழ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வெளிநாட்டில் இத்தனை ஆயிரம் மக்கள் திரண்டது என்பது இதுவே முதல்முறையாகும். இந்தப் பிரம்மாண்டத்தைக் கௌரவிக்கும் விதமாக, 'மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' இந்த நிகழ்வைச் சாதனையாகப் பதிவு செய்துள்ளது.
இசை வெளியீட்டு மேடையிலேயே இதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ் மற்றும் விருது நடிகர் விஜய்யிடம் வழங்கப்பட்டது. ஜனவரி 9-ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், இந்த இசை வெளியீட்டு விழா படத்திற்கான பிரம்மாண்டமான விளம்பரமாக மாறியுள்ளது.தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளிலும் இந்தப் படத்திற்கான முன்பதிவு இப்போதே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan