அஜித்தின் 65ஆவது இயக்கப்போவது இவரா?
9 மாசி 2026 திங்கள் 16:11 | பார்வைகள் : 1975
குட் பேட் அக்லி வெற்றிப் படமாக அமைந்தும் அஜித்தின் அடுத்த திரைப்படம் இதுவரை ஆரம்பிக்கவில்லை. அஜித்தின் புதிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரனை இயக்குகிறார் என்றாலும் இந்த படத்தில் நடிக்க அஜித் 185 கோடி சம்பளம் கேட்பதால் இந்த படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன்னுரவில்லை..
ஆனால், அஜிதோ இந்த சம்பளம் கொடுத்தால் மட்டுமே நடிப்பேன் என கறாராக இருப்பதால் படம் இப்போது வரை டேக்ஆப் ஆகாமல் இருக்கிறது. இது அஜித்தின் 64வது திரைப்படமாகும்.
இந்நிலையில், அஜித்தின் 65ஆவது படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.. ஏனெனில் இவர் தற்போது அஜித்தின் கார் ரேஸ் தொடர்பான டாக்குமென்டரி படத்தை இயக்கி வருகிறார்.. அஜித் மலேசியாவில் கார் ரேஸில் கலந்து கொண்ட போது அங்கு பல காட்சிகளையும் படம் பிடித்தார்.
தற்போது துபாயிலும் அஜித் கார் ரேஸில் கலந்துகொள்ளும் காட்சிகளை படடுத்து வருகிறார்.அதோடு அஜித் வைத்து ஏற்கனவே கிரீடம் படத்தையும் இவர் இயக்கியுள்ளார். எனவே ஆதிக் ரவிச்சந்திரன் படத்திற்கு பின் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அஜித் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire