லிபிய தலைமைச் செயலாளர் பயணித்த விமான விபத்தில் இரண்டு பிரெஞ்சு விமானப் பணியாளர்கள் உயிரிழப்பு!!
27 மார்கழி 2025 சனி 07:45 | பார்வைகள் : 856
துருக்கியில் லிபிய தலைமைச் செயலாளர் பயணித்த விமானம் செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில், இரண்டு பிரெஞ்சு விமானப் பணியாளர்கள் உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
அங்காராவிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மின்சார கோளாறு ஏற்பட்டதாக தெரிவித்த விமானம், நகரத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் வீழ்ந்தது. என தூதரக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. பிரான்ஸ் வெளிநாட்டு விவகார அமைச்சகம், துருக்கியில் உள்ள தனது தூதரகம் வழியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்து வருகிறது.
விமானத்தில் லிபியாவைச் சேர்ந்த ஐந்து உயர்நிலை இராணுவ அதிகாரிகள் இருந்துள்ளனர்; அவர்களில் ஜெனரல் முகம்மது அலி அகமது அல்-ஹத்தாத் என்பவரும் அடங்குவார். விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு, நடுநிலையான ஒரு நாட்டில் ஆய்வு செய்யப்பட உள்ளது.
லிபியாவில் தற்போது திரிபோலியில் உள்ள ஐ.நா. அங்கீகாரம் பெற்ற தேசிய ஒற்றுமை அரசு மற்றும் பெங்காசியில் உள்ள மார்ஷல் கலீஃபா ஹப்தார் கட்டுப்பாட்டிலான அரசு ஆகிய இரண்டு நிர்வாகங்கள் அதிகாரத்திற்காக போட்டியிட்டு வருகின்றன. இந்த சூழலில், திரிபோலி அரசின் முக்கிய கூட்டாளியாக துருக்கி செயல்பட்டு வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan