கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸில் அவசர நிலை பிரகடனம்
26 மார்கழி 2025 வெள்ளி 12:47 | பார்வைகள் : 200
அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரப் பகுதிகளில் நேற்று 25.12.2025 வீசிய “கிறிஸ்மஸ் புயல்” மற்றும் வெள்ள அனர்த்தத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் தினத்தன்று எழுந்ததால் “கிறிஸ்மஸ் புயல்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மணிக்கு 88 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் டிசம்பர் 25ஆம் திகதி முதல் 3 நாட்களுக்கு கனமழை மற்றும் கடும் காற்று, பனிப்பொழிவுக்கு சாத்தியமிருப்பதாக அந்நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
குறிப்பாக, தெற்கு கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸில் கனமழையும் மேற்கு மற்றும் வடக்கு கலிபோர்னியாவில் கடும் பனிப்பொழிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தெற்கு கலிபோர்னியாவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் கடுமையாக கிறிஸ்மஸ் புயல் வீசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan