Paristamil Navigation Paristamil advert login

தினமும் 30 நிமிட நடைபயிற்சி தரும் பயன்கள்

தினமும் 30 நிமிட நடைபயிற்சி தரும் பயன்கள்

4 தை 2019 வெள்ளி 13:12 | பார்வைகள் : 12547


 எளிய உடற்பயிற்சியான நடைபயிற்சியினை தினமும் செய்யுங்கள் என எப்போதும் மருத்துவ குறிப்பு கூறுபவர்களும் வலியுறுத்திக் கொண்டேதான் இருக்கின்றார்கள். அவ்வகையில் நாமும் தினம் 30 நிமிடம் நடைபயிற்சி செய்பவர்கள் பெறும் பலனை மீண்டும் பார்ப்போம்.

 
* இருதய நோய் பாதிப்பினை குறைக்கின்றது.
 
 * சீரான எடையினை காக்க முடிகின்றது.
* மன உளைச்சலை வெகுவாய் குறைக்கின்றது.
* உடலில் சக்தியினைக் கூட்டுகின்றது.
* மன நலம் நன்கு இருக்கின்றது.
 
* ரத்த ஓட்டம் சீராய் இயங்குகின்றது.
* பட படப்பு குறைகின்றது.
* நுரையீரல் நன்கு இயங்குகிறது.
* உடலுக்கு சூரிய ஒளி முலம் வைட்டமின் டி கிடைக்கின்றது.
 
* புற்று நோய் பாதிப்பு குறைகின்றது.
* தேவையான அளவு தூக்கம் கிடைக்கின்றது.
* கை, கால் இயக்கங்கள் சீராய் இருக்கின்றது.
* தரமான ஆரோக்கியம் கிடைக்கின்றது.
* சர்க்கரை நோய் பாதிப்பு குறைகிறது.
 
* மூளை செயல்பாட்டு திறன் கூர்மையாகின்றது.
* சதைகளும், எலும்புகளும் பலம் பெறுகின்றன.
* ரத்த அழுத்தம் சமநிலையில் இருக்கின்றது.
* நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.
 
உடம்பு கொஞ்சம் சோர்வாக இருக்கின்றதா? சற்று அக்கறை எடுத்து உங்கள் உடம்பை கவனியுங்கள்.
 
* மூக்கு அடைத்தாற் போல் உள்ளதா?
* தும்மல், இருமல் இருக்கின்றதா?
* ஜுரம் இருப்பது போல் உணர்கின்றீர்களா?
 
* நன்கு நீர் குடியுங்கள். சுடுநீரும் குடிக்கலாம். படுத்து ஓய்வு எடுங்கள். ஆவி பிடியுங்கள். வெது வெதுப்பான சூப் குடியுங்கள். வீட்டில் இருங்கள். உலகமே உங்கள் தலையில்தான் சுழல்வது போல் உடல் அறிகுறிகளை ஒதுக்கி வேலை, வேலை என ஓட வேண்டாம். இந்த சிறிய சிகிச்சைகள் மிகுந்த பலன் அளிக்கும். உங்கள் உடம்பை நன்கு அறிந்த இயற்கை மருத்துவர் நீங்கள்தான்

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்