மழை வெள்ளம்! - ஆறு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!
21 மார்கழி 2025 ஞாயிறு 11:26 | பார்வைகள் : 303
மழை வெள்ளம் போன்ற அனர்த்தம் காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிறத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 21, இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியில் இருந்து இன்று நள்ளிரவு வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Aveyron, Hérault, Lozère ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு வெள்ளம் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கையும் Gard, Lozère மற்றும் Ardèche ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழை காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது.
மேலும் பல தெற்கு மாவட்டங்களில் பல இடங்களில் இலேசான மற்றும் பலத்த மழை பதிவாகும் என எச்சரிக்கப்பட்டு மஞ்சள் நிற எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதாக Météo-France தெரிவிக்கிறது.
இன்று பிற்பகல் 2 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை இந்த எச்சரிக்கை செல்லுபடியாகும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan