திருப்பரங்குன்றம் மலைமேல் செல்ல இஸ்லாமியருக்கு மட்டும் அனுமதி
21 மார்கழி 2025 ஞாயிறு 12:14 | பார்வைகள் : 190
திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு, நேற்று காலை மலை மேல் செல்ல இஸ்லாமியர்கள் நான்கு பேருக்கு போலீசார் அனுமதித்ததால், அப்பகுதி குடியிருப்போர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மதுரை, திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரம் காரணமாக மலை மேல் பக்தர்கள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.
சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, மலையில் உள்ள தர்காவிற்கு நேற்று இஸ்லாமியர்கள் நான்கு பேரை போலீசார் அனுமதித்ததை அறிந்து, உள்ளூர் மக்கள் திரண்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புதிய நடைமுறை அவர்களிடம், போலீஸ் உதவி கமிஷனர் சசிபிரியா, 'கடந்த ஆண்டுகளில் எப்படி கொடி இறக்கி, ஏற்றினார்களோ, அதுபோல் தற்போது கொடியை இறக்க செல்கிறார்கள். புதிய நடைமுறை ஏதும் இல்லை' என்றார்.
'நீதிமன்ற தீர்ப்பின்படி தீபத்துாணில் தீபம் ஏற்ற எங்களை அனுமதிக்க மறுக்கிறீர்கள். ஆனால், நீதிமன்ற உத்தரவே இல்லாமல் இஸ்லாமியர்களுக்கு எப்படி அனுமதி அளிக்கிறீர்கள். முன்பு தீபத்துாணில் தீபம் ஏற்றியுள்ளனர்.
'அங்கு தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் போலீசார் தான் தடுத்து நிறுத்தினீர்கள்' என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
'அங்கு தீபம் ஏற்றியதை நீங்கள் பார்த்தீர்களா?' என, உதவி கமிஷனர் கேட்க, 'நாங்கள் பார்க்கவில்லை. எங்கள் மூதாதையர் பார்த்துள்ளனர். அவர்கள் பார்த்ததை எங்களிடம் கூறியுள்ளனர்' என்றனர். அதற்கு, உதவி கமிஷனர், 'கோர்ட்டில் வழக்கு உள்ளது' என்றார்.
கடும் கட்டுப்பாடுகள் 'கோர்ட் உத்தரவிட்டும் தீபம் ஏற்றுவதை தடுத்தது போலீஸ் தானே' என, திருப்பி கேட்ட பொதுமக்கள், 'எங்களுக்கு மலை மேல் தீபம் ஏற்றாமல் அவர்களது கொடியை ஏற்றக்கூடாது. எங்களை சுவாமி கும்பிடக்கூட மலைக்கு அனுப்ப மறுக்கிறீர்கள். ஆனால், அவர்களை கொடியேற்ற அனுமதிக்கிறீர்கள். இது என்ன நியாயம்?
'எங்கள் மலையில் நாங்கள் கும்பிடக்கூட எங்களுக்கு உரிமை இல்லாமல் போய்விட்டது' என, தொடர்ந்து வாக்குவாதம் செய்தனர்.
அதற்கு உதவி கமிஷனர், 'உங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுங்கள். உயர் அதிகாரிகளுக்கு அனுப்புகிறோம்' என்று கூறி சென்றார்.
அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:
மலை படிக்கட்டுக்கும், பெரிய ரத வீதிக்கும் இடையில் மலை அடிவாரத்தில் பழனி ஆண்டவர் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
கார்த்திகை தீபம் அன்று முதல் இன்று வரை அனைத்து இடங்களிலும் இரும்பு தடுப்புகளை அமைத்து வீட்டில் குடியிருப்பவர்களை கூட உள்ளே அனுமதிப்பதற்கு போலீசார் கடும் கட்டுப் பாடுகளை விதிக்கின்றனர்.
நாங்கள் ஏதோ குற்றம் செய்தவர்களை போல் எங்களிடம் நடந்து கொள்கின்றனர். மேலே உள்ள காசி விசுவநாதர் கோவிலுக்கு செல்ல எங்களையும் அனுமதிக்க வேண்டும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan