Paristamil Navigation Paristamil advert login

மொட்டையடிக்கப்பட்ட மாணவன்! - மேலும் இரண்டு புதிய சம்பவங்கள்!!

மொட்டையடிக்கப்பட்ட மாணவன்! - மேலும் இரண்டு புதிய சம்பவங்கள்!!

18 மார்கழி 2025 வியாழன் 18:25 | பார்வைகள் : 622


சிறுவர்கள் தங்குமிடம் ஒன்றில் சிறுவன் ஒருவனது தலை மொட்டையடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், அதேபோன்ற மேலும் இரு சம்பவங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.


ASC என அழைக்கப்படும் சிறுவர்கள் பராமரிபு நலன்புரிச் சங்கத்தினால் நிர்வாகிக்கப்படும் சிறுவர் இல்லம் ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 8 வயதுடைய சிறுவன் ஒருவனது செய்தி கடந்தவாரம் முழுவதும் பேசுபொருளாகியுள்ள நிலையில், அதே நலன்புரிச் சங்கத்துக்கு கட்டுப்பட்ட வேறொரு (பரிசில்) நிலையத்தில் 7,8  வயதுகளையுடைய இரு சிறுவர்கள் மொட்டையடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தை அடுத்து, பரிஸ் மாநகரசபை குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்