Paristamil Navigation Paristamil advert login

சென் நதியில் மிதந்து வந்த சடலம்!!

சென் நதியில் மிதந்து வந்த சடலம்!!

18 மார்கழி 2025 வியாழன் 15:51 | பார்வைகள் : 499


சென் நதியில் இருந்து ஆண் ஒருவரது சடலம்  மீட்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 17, நேற்று புதன்கிழமை பகல் பரிஸ் 6 ஆம் வட்டாரத்தின் Pont Neuf பகுதியில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2.30 மணி அளவில் காவல்துறையினர் எச்சரிக்கப்பட்டதை அடுத்து, மீட்புப்படையினர் விரைந்து சென்றனர்.

சென் நதியில் ஆணின் சடலம் மிதந்து வந்ததாகவும், மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, சடலத்தில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மூன்று வாரங்களுக்கு குறையாமல் சடலம் நதிக்குள் இருந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்