Paristamil Navigation Paristamil advert login

லைகா நிறுவனத்தின் தயாரிபில் விஜய் சேதுபதி ?

லைகா நிறுவனத்தின் தயாரிபில் விஜய் சேதுபதி ?

18 மார்கழி 2025 வியாழன் 16:00 | பார்வைகள் : 177


திரையுலகில் பல பிரம்மாண்ட தயாரிப்புகளை வழங்கி வரும் லைகா நிறுவனம், தற்போது இயக்குனர் பாண்டிராஜுடன் கைகோர்த்துள்ளது. 'தலைவன் தலைவி' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.  

தொடக்கத்தில் இந்த திரைப்படத்திற்காக இயக்குனர் பாண்டிராஜ் சுமார் 70 கோடி ரூபாய் பட்ஜெட் கோரியதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், தற்போதைய சந்தை நிலவரம் மற்றும் தயாரிப்பு செலவுகளை கருத்தில் கொண்டு, லைகா நிறுவனம் பட்ஜெட்டை சற்று குறைக்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகர் ஒருவரை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது ரகசியமாக நடைபெற்று வருகின்றன. சரியான திட்டமிடலுடன் உருவாகும் இப்படம் லைகா நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்