இலங்கை கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளரான முன்னாள் இந்திய வீரர்
18 மார்கழி 2025 வியாழன் 15:18 | பார்வைகள் : 129
இலங்கை கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஆர்.ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஆர்.ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் T20 உலகக்கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த தொடர் முடியும் வரை ஸ்ரீதர் இந்த பதவியில் தொடர்வார்.
அதற்கு முன்னதாக பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் T20 தொடரில் இலங்கை அணி விளையாட உள்ளது.
இந்தியாவில் லிஸ்ட் ஏ, மற்றும் முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்ரீதர், 2014 முதல் 2021 வரை இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.
இதில், 2 ODI உலகக்கோப்பை, 2 T20 உலகக்கோப்பை என 300 சர்வதேச போட்டிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
மேலும், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி, பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் அணி ஆகியவற்றின் பீல்டிங் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.
ஆந்திரா கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகவும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.
மே மாதம் இலங்கை கிரிக்கெட்டின் தேசிய உயர் செயல்திறன் மையத்தில் 10 நாள் சிறப்பு பீல்டிங் முகாமை ஆர்.ஸ்ரீதர் நடத்தினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan