Paristamil Navigation Paristamil advert login

தனது சாதனையை முறியடித்ததால் நாற்காலியை அடிக்க தூக்கிய ஜாம்பவான்

தனது சாதனையை முறியடித்ததால் நாற்காலியை அடிக்க தூக்கிய ஜாம்பவான்

18 மார்கழி 2025 வியாழன் 15:18 | பார்வைகள் : 160


இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்டில் நாதன் லயன் 564வது விக்கெட்டை கைப்பற்றினார்.

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது.

அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 371 ஓட்டங்கள் குவித்தது. இங்கிலாந்து அணிக்கு கடுமையான நெருக்கடி கொடுத்த மிட்சேல் ஸ்டார்க் 54 ஓட்டங்கள் விளாசினார். அபாரமாக பந்துவீசிய ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட்டுகளும், கார்ஸ் மற்றும் ஜேக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

ஹாரி புரூக் 45 ஓட்டங்களும், பென் டக்கெட் 45 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்க, அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) 151 பந்துகளில் 45 ஓட்டங்கள் எடுத்து அணியை மீட்க போராடி வருகிறார்.

ஓலி போப், டக்கெட் ஆகியோரது விக்கெட்டுகளைக் கைப்பற்ற நாதன் லயனின் டெஸ்ட் விக்கெட்டுகள் எண்ணிக்கை 564 ஆக உயர்ந்தது.

இதன்மூலம் ஜாம்பவான் வீரர் க்ளென் மெக்ராத்தை (563) அவர் முந்தி 6வது இடத்திற்கு முன்னேறினார்.

அப்போது வர்ணனையாளராக அமர்ந்திருந்த மெக்ராத், நாற்காலியை தூக்கி மைதானத்தில் இருந்த லயனை அடிப்பதுபோல் செய்துகாட்டியது நகைப்பை ஏற்படுத்தியது.

🔥 இன்றைய சிறப்பு சலுகை

வர்த்தக‌ விளம்பரங்கள்