Paristamil Navigation Paristamil advert login

நெத்திலி கருவாட்டு சம்பல் கிரேவி

நெத்திலி கருவாட்டு சம்பல் கிரேவி

18 மார்கழி 2025 வியாழன் 13:19 | பார்வைகள் : 117


தேவையான பொருட்கள் : நெத்திலி கருவாடு, வெல்லம், உப்பு, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், வெள்ளை பூண்டு, சமையல் எண்ணெய், புளி,

செய்முறை: நெத்திலி கருவாட்டை சுடுதண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும். காய்ந்த மிளகாயை எடுத்து 10 நிமிடம் பச்சை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். சின்ன வெங்காயம், வெள்ளை பூண்டு மற்றும் காய்ந்த மிளகாயை மிக்ஸியில் போட்டு நன்றாக பேஸ்ட் போன்று அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சுடுதண்ணீர் ஊற வைத்த கருவாட்டினை போட்டு மொறுமொறுப்பாக வரும் வரை‌ நன்றாக வதக்கி எடுக்க வேண்டும். பின், அதே கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் அரைத்து வைத்த பேஸ்ட்டை அதில் சேர்த்து கொண்டு நன்றாக வதக்கி கொள்ளவும்.

இதன்பின் புளிக்கரைசல் மற்றும் கொஞ்சம் வெல்லம் சேர்த்து விட்டு நன்றாக கிளரியபின், பொறித்து வைத்த கருவாடு மற்றும் உப்பினை சேர்த்தால்  நெத்திலி கருவாட்டு சம்பல் கிரேவி ரெடியாகிடும்

வர்த்தக‌ விளம்பரங்கள்