Paristamil Navigation Paristamil advert login

ஏவுகணை சோதனைக்கு தயாராகும் இந்தியா; வங்கக் கடலில் விமானங்கள் பறக்க அனுமதி இல்லை

ஏவுகணை சோதனைக்கு தயாராகும் இந்தியா; வங்கக் கடலில் விமானங்கள் பறக்க அனுமதி இல்லை

18 மார்கழி 2025 வியாழன் 09:22 | பார்வைகள் : 150


வங்கக்கடல் பகுதியில் ஏவுகணை சோதனை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை செய்து வரும் இந்தியா, 'நோடம்' (நோட்டீஸ் டூ ஏர் மேன்) (NOTAM) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரையில் இந்தியா கடற்படை சார்ந்த ஏவுகணை சோதனை நடத்த உள்ளது. இருப்பினும் இந்த நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட ஏவுகணை அமைப்பு அல்லது ஏவுதளத்தைப் பற்றி எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியிடப்படவில்லை.

நோடம் என்பது என்ன?

ஒரு குறிப்பிட்ட வான்வெளிப் பகுதியை சிவில் விமானப் போக்குவரத்திலிருந்து விடுவிக்க வேண்டியிருக்கும்போது நோடம் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. பாகிஸ்தானுடனான முந்தைய பதட்டங்களின்போதும் இதேபோன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இது வணிக விமானங்களை ராணுவ நடவடிக்கைப் பகுதிகளிலிருந்து விலக்கி வைப்பதன் மூலம் பொதுமக்களின் உயிரிழப்புகளைத் தடுக்க உதவுகிறது.

நோடம் அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன், குறிப்பிட்ட வான்வெளிப் பகுதிக்குள் எந்த சிவில் விமானமும் பறக்க அனுமதிக்கப்படாது.

முன்னதாக டிசம்பர் 11 அன்று, டிசம்பர் 17 முதல் டிசம்பர் 20 வரை வங்காள விரிகுடாவில் 3,550 கிலோமீட்டர் தூரத்திற்கு இதேபோன்ற NOTAM அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்