Paristamil Navigation Paristamil advert login

எம்.எஸ் சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சாய்பல்லவி?

எம்.எஸ் சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில்  சாய்பல்லவி?

17 மார்கழி 2025 புதன் 15:18 | பார்வைகள் : 174


சமீப வருடங்களாக கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக எடுக்கும் போக்கு தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக தெலுங்கில் நடிகை சாவித்திரியின் பயோபிக்கை மகாநடி என்கிற பெயரில் வெளியிட்டனர். நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான காந்தா திரைப்படம் கூட தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாறு என்று சொல்லப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் இன்னொரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாறாக பிரபல கர்நாடக இசைக்கலைஞர் எம்.எஸ் சுப்புலட்சுமியின் பயோபிக்கை சினிமாவாக எடுக்கும் பணிகள் துவங்கியுள்ளதாக தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது. இதில் எம்.எஸ் சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சாய்பல்லவி நடிக்க இருக்கிறார் என்றும் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.

பிரபல தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் ஏற்கனவே இவர்கள் தயாரிப்பில் சாய்பல்லவி தண்டேல் என்கிற படத்தில் நடித்துள்ளதால் இந்த பயோபிக்கில் நடிக்க ஒப்புக் கொள்வார் என்றும் விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்