Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் தோழிகளுடன் ராஷ்மிகா மந்தனா!

இலங்கையில் தோழிகளுடன் ராஷ்மிகா மந்தனா!

17 மார்கழி 2025 புதன் 15:18 | பார்வைகள் : 183


 முன்னணி நடிகைகளுள் ஒருவரான ராஷ்மிகா மந்தனா, தற்போது தனது தோழிகளுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 பரபரப்பான படப்பிடிப்புகளுக்கு மத்தியில் இரண்டு நாட்கள் ஓய்வு கிடைத்ததாகவும், அந்த நேரத்தை தனது தோழிகளுடன் செலவிட இலங்கையைத் தேர்ந்தெடுத்ததாகவும் ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடற்கரை மற்றும் அழகான தங்குமிடங்களில் தனது தோழிகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். "தோழிகளுடனான பயணங்கள் எப்போதும் சிறப்பானவை" என அவர் அதற்கு தலைப்பிட்டுள்ளார்.

இதனிடையே ராஷ்மிகா மந்தனாவுக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக நீண்ட நாட்களாக வதந்திகள் பரவி வருகின்றன.இந்த நிலையில், அவர் தோழிகளுடன் திடீரென இலங்கைக்கு சுற்றுலா வந்திருப்பது, இது அவரது திருமணத்திற்கு முந்தைய 'பேச்சிலர் பார்ட்டி' பயணமாக இருக்கலாம் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சில ரசிகர்கள் இது வெறும் நட்பு ரீதியான பயணம் என்று கூறினாலும், பெரும்பாலானோர் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.எனினும், தனது திருமணம் குறித்த வதந்திகளுக்கு ராஷ்மிகா தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்