Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் சொதப்பிய பாபர் அஸாம்: வறுத்தெடுக்கும் இணையவாசிகள்

மீண்டும் சொதப்பிய பாபர் அஸாம்: வறுத்தெடுக்கும் இணையவாசிகள்

17 மார்கழி 2025 புதன் 12:18 | பார்வைகள் : 126


பிக் பாஷ் லீக் தொடரில் பாகிஸ்தானின் பாபர் அஸாம் தொடர்ந்து சொதப்பி வருவதால் இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சிட்னியில் நடந்து வரும் பிக் பாஷ் லீக் போட்டியில், சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

நாணய சுழற்சியில் வென்ற அடிலெய்டு பந்துவீச்சை தெரிவு செய்ய, சிட்னி சிக்ஸர்ஸ் முதலில் துடுப்பாடியது.

20 ஓவர்கள் முடிவில் சிட்னி சிக்ஸர்ஸ் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் எடுத்தது. பிலிப் 28 பந்துகளில் 46 ஓட்டங்களும் (1 சிக்ஸர், 8 பவுண்டரிகள்), சில்க் 21 பந்துகளில் 32 ஓட்டங்களும் (1 சிக்ஸர், 3 பவுண்டரிகள்) விளாசினர்.

தொடக்க வீரராக களமிறங்கிய பாபர் அஸாம் (Babar Azam) 9 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில் மேத்யூ ஷார்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் 2 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.

பாபர் அஸாம் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் சொதப்பியதால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மறுபுறம் இணையவாசிகள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்