Paristamil Navigation Paristamil advert login

இந்தியா ஒரு முக்கியமான கூட்டாளி, பிரதமர் மோடி ஒரு சிறந்த நண்பர்: அமெரிக்க தூதரகம்

இந்தியா ஒரு முக்கியமான கூட்டாளி, பிரதமர் மோடி ஒரு சிறந்த நண்பர்:  அமெரிக்க தூதரகம்

17 மார்கழி 2025 புதன் 14:56 | பார்வைகள் : 107


அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவை ஒரு அற்புதமான நாடு என்று அழைத்ததாக, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்றின் தாயகமாக இந்தியா உள்ளது. இது ஒரு அற்புதமான நாடு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கு ஒரு முக்கியமான கூட்டாளி.

பிரதமர் மோடி எங்களுக்கு ஒரு சிறந்த நண்பர். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியதாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு, வர்த்தகம், எரிசக்தி குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பிரதமர் மோடி போனில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

அமெரிக்க, இந்திய இருதரப்பு ஒத்துழைப்பு வலுவடைவதில் திருப்தி என பிரதமர் மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்