Paristamil Navigation Paristamil advert login

அமைச்சர் நேரு வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

அமைச்சர் நேரு வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

17 மார்கழி 2025 புதன் 10:56 | பார்வைகள் : 139


தி.மு.க.,வைச் சேர்ந்த, அமைச்சர் நேரு கட்டுப்பாட்டில் உள்ள, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், கடந்த 2024- - 25ம் ஆண்டுகளில் உதவி, இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட, 2,538 பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

ஒரு பதவிக்கு, 25 லட்சம் ரூபாய் முதல் 35 லட்சம் ரூபாய் வரை என, மொத்தம் 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளது என்பதால், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யக் கோரி, தமிழக டி.ஜி.பி.,க்கு, கடந்த அக்டோபரில் அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த கடிதத்தின் அடிப்படையில், இது தொடர்பாக தலைமைச் செயலரிடம் உரிய அனுமதிகளை பெற்று, வழக்குப்பதிவு செய்யும்படி, தமிழக டி.ஜி.பி.,க்கு உத்தரவிட கோரி, மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, தமிழக அரசு, டி.ஜி.பி., மற்றும் அமலாக்கத் துறை, ஜனவரி 23ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு உள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்