22 பந்துகளில் 50 ஓட்டங்கள் அடித்தும் தோல்வி: சரவெடி ஆட்டம் ஆடிய காலின் மன்ரோ
16 மார்கழி 2025 செவ்வாய் 07:39 | பார்வைகள் : 437
பிக்பாஷ் இரண்டாவது போட்டியில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணி, 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தியது.
முதலில் துடுப்பாடிய மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணி 212 ஓட்டங்கள் குவித்தது. டிம் செய்பெர்ட் (Tim Seifert) 56 பந்துகளில் 102 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணியில் ஜேக் வில்டர் டக்அவுட் ஆனார். நாதன் மெக்ஸ்வீணி 9 ஓட்டங்களிலும், மேட் ரென்ஷா 18 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
வில் சதர்லேண்டின் மிரட்டலான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்த்தன. எனினும், அரைசதம் அடித்த காலின் மன்ரோ (Colin Munro) 32 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 55 ஓட்டங்கள் விளாசினார்.
விக்கெட் கீப்பர் ஜிம்மி பியர்ஸன் (Jimmy Peirson) 22 பந்துகளில் 50 ஓட்டங்கள் குவிக்க அணியின் ஸ்கோர் உயர்ந்தது.
எனினும், பிரிஸ்பேன் ஹீட் அணியால் 198 ஓட்டங்களே எடுத்து தோல்வியுற்றது. ஹூக் வெய்கேன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 20 பந்துகளில் 38 ஓட்டங்கள் விளாசினார்.
வில் சதர்லேண்ட் 3 விக்கெட்டுகளும், சந்து மற்றும் பெஹென்டோர்ப் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan