Paristamil Navigation Paristamil advert login

டி20யில் முதல் இந்தியர் சாதனையை படைத்த அபிஷேக் ஷர்மா

டி20யில் முதல் இந்தியர் சாதனையை படைத்த அபிஷேக் ஷர்மா

16 மார்கழி 2025 செவ்வாய் 07:39 | பார்வைகள் : 147


சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் பந்தில் சிக்ஸ் அடித்ததில் அபிஷேக் ஷர்மா சாதனை படைத்தார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அபிஷேக் ஷர்மா (Abhishek Sharma) 18 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்கள் விளாசினார்.

இந்த இன்னிங்ஸின் முதல் பந்தில் அபிஷேக் சிக்ஸர் அடித்திருந்தார்.

இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் முதல் பந்தில் 3 முறை சிக்ஸர் அடித்த "முதல் இந்திய வீரர்" என்ற சாதனையைப் படைத்தார்.

இதற்கு முன் ரோஹித் ஷர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் தலா ஒருமுறை முதல் பந்தில் சிக்ஸர் விளாசியிருந்தனர்.

இதற்கிடையில், அபிஷேக் ஷர்மா இன்னும் 87 ஓட்டங்கள் எடுத்தால், விராட் கோஹ்லியின் ஓர் காலண்டர் ஆண்டில் அதிக ஓட்டங்கள் (டி20யில்) எடுத்த வீரர் எனும் சாதனையை முறியடிப்பார்.

அபிஷேக் ஷர்மா இதுவரை 32 போட்டிகளில் 1081 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 2 சதங்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். மேலும் 72 சிக்ஸர்கள், 101 பவுண்டரிகளும் அடித்துள்ளார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்