Paristamil Navigation Paristamil advert login

முன்னாள் பிரதமர் பிரான்சுவா பெய்ரு - மருத்துவமனையில் அனுமதி!!

முன்னாள் பிரதமர் பிரான்சுவா பெய்ரு - மருத்துவமனையில் அனுமதி!!

16 மார்கழி 2025 செவ்வாய் 09:00 | பார்வைகள் : 556


முன்னாள் பிரதமர் பிரான்சுவா பெய்ரூ உடலநலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று டிசம்பர் 15, திங்கட்கிழமை அவர் Pau நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மிக தீவிரமான வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், தீவிர மருத்துவக்கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.

பிரான்சில் வைரஸ் காய்ச்சல் பரவல் முழுவேகத்தில் பரவி வருகிறது. மாகாணம் விட்டு மாகாணம் பயணிப்போர் மிகுந்த அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

74 வயதுடைய பெய்ரூ, 2024 டிசம்பரில் இருந்து இவ்வருடம் செப்டம்பர் மாதம் வரை மக்ரோன் அரசாங்கத்தின் பிரதமராக பதவிவகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்