தி.மு.க., மட்டும் கூட்டம் நடத்தியது எப்படி? அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை கேள்வி
16 மார்கழி 2025 செவ்வாய் 13:41 | பார்வைகள் : 195
'அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவதற்கு உண்டான வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்படாத நிலையில், திருவண்ணாமலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு, தி.மு.க.,வுக்கு மட்டும் அனுமதி எப்படி கிடைத்தது,'' என, ராஜ்யசபாவில் அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை கேள்வி எழுப்பினார். அதற்கு, தி.மு.க., - எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நேற்று ராஜ்யசபாவில் அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை பேசியதாவது:
பிரசாரம் என்பது, தேர்தல் நடைமுறைகளில் மிகவும் முக்கியமானது. மக்களை சந்திக்கும் வாய்ப்பு அதன் வாயிலாகத்தான் கிடைக்கும். கரூர் சம்பவத்திற்கு பின், தேர்தல் பிரசாரங்களை அரசியல் கட்சிகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக, தேர்தல் பிரசார வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.
இதையடுத்து, தமிழக அரசின் சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, கருத்துகள் கேட்கப்பட்டன. ஆனாலும், இதுவரையில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்படவில்லை. இதனால், அரசியல் கட்சிகள் தமிழகத்தில் பொதுக் கூட்டமோ, பேரணியோ நடத்த முடியவில்லை. எதிர்க்கட்சிகள் மக்களிடம் சென்று பிரசாரம் செய்ய முடியவில்லை.
ஆனால், தி.மு.க.,வுக்கு மட்டும், திருவண்ணாமலையில் இளைஞரணி பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கி, நடத்தி உள்ளனர். தமிழகத்தில் அரசியல் கட்சியினர் பொதுக் கூட்டம் நடத்த ஏகப்பட்ட கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் விதிக்கும் அரசு, தி.மு.க.,வுக்கு மட்டும் எவ்வித கட்டுப்பாடும் விதிக்காதது ஏன்?
ஈரோடு இடைத்தேர்தலின்போது, வாக்காளர்களை ஆடு, மாடுகளை போல பட்டியில் போட்டு தி.மு.க., அடைத்து வைத்து, அவர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. பொதுக்கூட்டம் கூட ந டத்த முடியாத அளவுக்கு, தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
எனவே, தமிழகத்தில் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெற வேண்டும். தோல்வி பயத்தில் தி.மு. க., திருட்டு வேலை பார்க்கிறது. இவ்வாறு தம்பிதுரை பேசியதை அடுத்து, தி.மு.க., - எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தி.மு.க., - அ.தி.மு.க., என இரு தரப்பையும், ராஜ்யசபா தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அமைதிப்படுத்தினார். தொடர்ந்து, தமி ழக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை தம்பிதுரை வைத்தபோது, ''தவறான கருத்துகளையோ அல்லது மாநில விவகாரங்களையோ இங்கு பேச வேண்டாம்,'' என ராஜ்யசபா தலைவர் கேட்டு கொண்டார்.
அப்போதும் தம்பிதுரை, தி.மு.க., - எம்.பி., சிவா இடையே காரசார விவாதம் தொடர்ந்ததால், ராஜ்யசபாவில் அமளி நீடித்தது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan