Paristamil Navigation Paristamil advert login

சவுக்கு சங்கர் கைது: திமுக அரசுக்கு மார்கண்டேய கட்ஜூ கண்டனம்

சவுக்கு சங்கர் கைது: திமுக அரசுக்கு மார்கண்டேய கட்ஜூ கண்டனம்

16 மார்கழி 2025 செவ்வாய் 06:41 | பார்வைகள் : 196


விமர்சனத்தை சகித்துக் கொள்ள விரும்பாமல் சவுக்கு சங்கரை அப்பட்டமாக புனையப்பட்ட , ஜோடிக்கப்பட்ட மற்றும் இட்டுக்கட்டி, மிரட்டி பணம் பறித்ததாக போலீசார் கைது செய்துள்ளனர்,'' என சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.

கைது

நேற்று முன்தினம் ( டிச.,13) மதுபான 'பார்' உரிமையாளரை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்பட்ட புகாரில், 'யு டியூபர்' சவுக்கு சங்கரை, அவரது வீட்டின் கதவை உடைத்து போலீசார் கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஊழல்

கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ எழுதிய கட்டுரை ஒன்றில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் ஊழல் மலிந்துள்ளது. ஆனால், சமீப நாட்களாக இதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. ஊழல் இல்லாமல் எதுவும் நடக்காத மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தியாவில் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பத்தால் ஆளப்படும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது.

காமராஜர் முதல்வராக இருந்தபோது இருந்த தமிழகத்தின் பொற்காலத்தை, இந்தியாவின் சிறந்த மாநிலம் என முன்னாள் பிரதமர் நேருவால் புகழப்பெற்றது. தற்போது அதற்கு மாறுபட்ட நிலை நிலவுகிறது. நேர்மைக்கு ஒரு உதாரணமாக காமராஜர் திகழ்ந்தார்.

பாசிச ஆட்சி

தங்கள் ஊழல் மற்றும் பிற தவறுகளுக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையோ அல்லது விமர்சனத்தையோ சகித்துக்கொள்ள விரும்பாத ஆளும் புதிய பாசிச திமுக ஆட்சி, மாற்றுக்குரலையும் அடக்குவதற்காக மாநிலத்தில் ஒரு பயங்கரவாத ஆட்சியை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்