நாக்கின் நிறம் சொல்லும் உடல் ஆரோக்கியம் பற்றி தெரியுமா ?
15 மார்கழி 2025 திங்கள் 14:46 | பார்வைகள் : 198
நம் நாக்கின் நிறம், நமது உடல் ஆரோக்கியத்தை சொல்லிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். இக்காரணத்தால்தான், நாம் மருத்துவமனைக்கு செல்லும்போதுக்கூட மருத்துவர்கள் முதலில் நம்மை நாக்கை நீட்டி காட்ட சொல்வார்கள்.
மருத்துவத்தை பொறுத்தவரை, நாக்கு என்பது உடலின் முக்கியமான ஒரு உறுப்பு. அதன் நிறம், ஈரப்பதம் மற்றும் மேற்பரப்பு ஆகியவை உடல் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை. பொதுவாக நம் நாக்கின் நிறமானது இளஞ்சிவப்பில் இருக்கும். சற்று சூடாக இருக்கும். இந்த இரண்டிலும் மாற்றம் வரும்போது, நாம் நோய்வாய்ப்பட்டு இருப்பதை உணரலாம்.
நாக்கில் ஏற்படும் மாற்றங்களானது, செரிமானப் பிரச்னைகள், மன அழுத்தம் தொடங்கி சில நேரம் புற்றுநோய்க்கான அறிகுறியைகூட வெளிப்படுத்தும் என சொல்லப்படுகிறது. அப்படி என்னென்ன அறிகுறிக்கு நாக்கில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்ற அடிப்படைத் தகவல்களை இங்கே பார்க்கலாம்...
நாக்கில் வெள்ளைப்பூச்சுக்கள் வருவதென்பது குழந்தைகள், முதியவர்கள், நுரையீரல் நோயாளிகள் அல்லது நீரிழிவு நோயாளிகளிடம் அதிகம் காணப்படும். சில சந்தர்ப்பங்களில், நுண்ணுயிர் எதிர்ப்பு மாத்திரைகளை எடுத்துக் கொண்ட பிறகும் இது ஏற்படலாம். இதுவே நாக்கு பழுப்பு நிறத்தில் இருந்தால், இரும்புச்சத்து குறைபாடு குறிப்பிடப்படுகிறது.
கருமையான நிறத்தில் நாக்கு இருப்பது, பாக்டீரியா தொற்றையோ, புகை / போதைப்பொருள் பழக்கத்தையோ பெரும்பாலும் குறிக்கும். இப்படி இருப்பவர்கள், நாக்கை சுத்தம் செய்வது அவசியம். பர்ப்பிள் நிறத்தில் நாக்கு இருந்தால் இதயப்பிரச்னைகள், ரத்த ஓட்டம் சீரற்று இருப்பது போன்றவை குறிப்பிடப்படும். இதுவே சிவப்பு நிறத்தில் இருந்தால், ஏதேனும் ஒவ்வாமையோ, வைட்டமின் பி குறைபாடோ இருப்பதாக பொருள்.
ஆரஞ்சு நிறத்தில் நாக்கு இருப்பது வாய் வறண்டு இருப்பதையும், சுத்தமற்று இருப்பதையும் குறிக்கும். இதுவே மஞ்சள் நிறத்தில் இருந்தால் மோசமான வாய் பராமரிப்பு, பாக்டீரியா பிரச்னைகள், மஞ்சள்காமாலை (சில சமயம் நீரிழிவு பாதிப்பையும்) போன்றவற்றை குறிக்கும். இரண்டு வாரங்களுக்கு மேலும் நாக்கின் நிறம் இயல்பாக இல்லாமல் இருப்பது, உடன் காய்ச்சல், சருமப் பிரச்னைகள், வயிற்று வலி, ஏதேனும் வலி, தொண்டையில் அசௌகரியம் / வலி, மஞ்சள்காமாலை போன்றவை இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
மேற்குறிப்பிடப்பட்டவற்றில் நாக்கு மிகவும் வறண்டோ, அல்லது அதிக ஈரத்தன்மையுடனோ இருப்பது, வெள்ளை பூச்சுக்கள் அல்லது அசாதாரண நிறத்தில் இருப்பது கவனிக்கத்தக்க அறிகுறிகள். நாக்கின் நிறம் அல்லது தன்மை மாறுகிறது எனும்பட்சத்தில் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan