வெங்காய சட்னி
15 மார்கழி 2025 திங்கள் 13:46 | பார்வைகள் : 121
நம்முடைய வீட்டில் எப்பொழுதுமே தேங்காய் சட்னி கார சட்னி, வெங்காய சட்னி தான் செய்து கொண்டிருக்கின்றோம். ஆனால் ஆந்திரா ஸ்டைலில் காரமான சட்னிகளை சாப்பிட்டு விட்டீர்களா ஆந்திரா என்றாலே காரமான சுவையான உணவு வகைகளை சாப்பிடுவார்கள். அப்படி ஆந்திரா ஸ்டைலில் சூப்பரான, சுவையான, காரசாரமான ஆந்திரா வெங்காய சட்னியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்வோமா?
தேவையான பொருட்கள் - 2 டீஸ்பூன், கடுகு -½ டீஸ்பூன், வெந்தயம் - 1/4 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், வரமிளகாய் - 12, பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது), உப்பு - சுவைக்கேற்ப, தக்காளி -1 (நறுக்கியது), புளி - பெரிய நெல்லிக்காய் அளவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்அதேபோல் தாளிப்பதற்கு இதனையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - 1/4 டீஸ்பூன், சீரகம் - 1/4 டீஸ்பூன், கடலைப் பருப்பு 2 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு 2 டீஸ்பூன், பூண்டு - 4 பல், வரமிளகாய் -2, கறிவேப்பிலை-1 கொத்து எடுத்து கொள்ள வேண்டும்.
முதலில் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்க எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதில் வரமிளகாயை சேர்த்து வறுத்து, அவற்றை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும். அதில் தக்காளியை சேர்த்து, அத்துடன் புளியையும் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி வைக்க வேண்டும். சூடு குறையும் வரை நன்றாக குளிர வைக்க வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் வறுத்த மிளகாயை சேர்த்து, அத்துடன் வதக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு சட்டியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, பூண்டு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் அரைத்த சட்னியை சேர்த்து கிளறி, 4-5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். இப்பொழுது காரசாரமான ஆந்திரா ஸ்டைல் வெங்காய சட்னி தயாராகிவிடும் இதனை இட்லி தோசை உடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அவ்வளவு சுவையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan