அஜித்தை வைத்து சிறுத்தை சிவா படம் இயக்குகிறாரா ?
15 மார்கழி 2025 திங்கள் 13:46 | பார்வைகள் : 191
நடிகர் அஜித் குமார், கார் பந்தய அணி ஒன்றைத் தொடங்கி உலகெங்கும் பயணம் செய்து கார் ரேஸ்களில் பங்கேற்று வருகிறார். படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட அஜித், தன் வாழ்நாள் லட்சியங்களுள் ஒன்றான கார் ரேசில் பங்கேற்று வருகிறார். தற்போது மலேசியாவில் நடைபெறும் ஏஷியன் லீமென்ஸ் சீரிஸ் தொடரில் பங்கேற்றுள்ளார். மலேசியாவில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்றுள்ளது.
இதனால், மலேசியா செல்லும் பிரபலங்கள், அஜித்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறி வருகின்றனர். முன்னதாக, சனிக்கிழமை நடந்த போட்டியில், காரில் ரேடியேட்டர் பழுதானதால் அஜித்தால் போட்டியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ரேசிங்கிற்கு செல்லும் முன் தனது மனைவி ஷாலினியுடன் சில நொடிகள் பேசிய அஜித், போட்டியில் பங்கேற்க விடைபெறும்போது அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இந்த காட்சிகளை நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே, மலேசியாவில் கார் பந்தயத்தில் அஜித்துடன் பயணித்து வரும் இயக்குநர் சிறுத்தை சிவாவிடம், 'அஜித்தை வைத்து கார் பந்தயத்தை மையமாகக் கொண்ட படம் இயக்கப் போகிறீர்களா?' எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த சிறுத்தை சிவா, "காத்திருங்கள் அப்டேட் வரும்" என்று கூறினார்.
அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா. இவர் சில தினங்கள் முன் மலேசியாவில் உள்ள அஜித்துடன் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகின. இதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகியுள்ளன. அதாவது, அஜித்குமார் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் விளம்பரப் படங்களில் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டு வந்தது.
மலேசியாவில் உள்ள அஜித்குமார் குளிர்பானம் மற்றும் கட்டுமான நிறுவனம் என 2 விளம்பரங்களில் நடிக்க உள்ளதாகவும், விளம்பரப் படங்களில் நடிக்க வைக்க பல்வேறு நிறுவனங்கள் அஜித்தை அணுகி வருவதால் அடுத்தடுத்து பல விளம்பரங்களில் அவர் தோன்றுவார் எனவும் சொல்லப்பட்டன. இந்த நிலையில் தான் அஜித்தை வைத்து சிறுத்தை சிவா விளம்பர படம் ஒன்றை இயக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தான் சிறுத்தை சிவா மலேசியா சென்று அஜித்தை சந்தித்து இருக்கிறார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan