'வா வாத்தியார்' திரைப்படம் எம்ஜிஆர் நினைவுநாளில் வெளியாகுமா?
15 மார்கழி 2025 திங்கள் 12:46 | பார்வைகள் : 178
கார்த்தி, கிர்த்தி ஷெட்டி, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவான 'வா வாத்தியார்' படம் கடந்த வாரம் டிசம்பர் 12ம் தேதி வெளியாகி இருக்க வேண்டும். ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை காரணமாக இந்தப் படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.
சுமார் 21 கோடி ரூபாய் கடன் தொகையை முழுவதுமான செட்டில் செய்து படத்தை வெளியிடலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே இந்த வழக்கு குறித்து உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் இப்படத்தின் மீதுள்ள பிரச்னைகளை தீர்த்து வைக்கும் பேச்சுவார்த்தையிலும் தயாரிப்பு நிறுவனம் இறங்கியுள்ளதாம்.
டிசம்பர் 24ம் தேதி எம்ஜிஆர் நினைவுநாளை முன்னிட்டு படத்தை வெளியிடும் தீவிர முயற்சியில் இருக்கிறார்களாம். இப்படத்தில் தீவிர எம்ஜிஆர் ரசிகர் ஆகத்தான் கார்த்தி நடித்துள்ளார். அதனால்தான் படத்தின் பெயரும் 'வா வாத்தியார்'. இதற்கு மேலும் வாத்தியாரைக் காக்க வைத்துவிடாதீர்கள்
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan